வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன் :’எச் 1 பி’ உட்பட அனைத்து வகையான விசாக்கள் கோரி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கான பரிசீலனை கட்டணத்தை, அமெரிக்க அரசு, 12 சதவீதம் உயர்த்தியுள்ளது.
அமெரிக்காவில் பணியாற்ற செல்லும் வெளிநாட்டினருக்கு, எச் 1 பி உள்ளிட்ட விசாக்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. குறிப்பிட்ட சில விசாக்களின் விண்ணப்பங்களுக்கு, பிரீமியம் பரிசீலனை
கட்டணத்தை தேர்வு செய்தால், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
உதாரணமாக, ஐ – 1765, ஐ – 1439 போன்ற விண்ணப்ப படிவங்கள் மீது முடிவெடுக்க, 30 நாட்களாகும் நிலையில், எச் 1 பி விசா விண்ணப்பத்துக்கு, பிரீமியம் பரிசீலனை கட்டணத்தை செலுத்தினால், 15 நாட்களில் முடிவெடுக்கப்படும்.
இந்நிலையில், ‘எச் 1 பி’ விசா உட்பட அனைத்து வகை விசாக்களின் விண்ணப்பங்களுக்கான பிரீமியம் பரிசீலனை கட்டணத்தை, 12 சதவீதம் உயர்த்தி, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை அறிவித்துஉள்ளது.
இதன்படி, எச் 1 பி விசாவுக்கான விண்ணப்ப பிரீமியம் பரிசீலனை கட்டணம், 2.08 லட்சத்தில் இருந்து, 2.33 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், கணவன் அல்லது மனைவி மற்றும் எச் 1 பி விசா வைத்திருப்பவர்கள் தங்களுடைய புலம்பெயர்ந்தோர் அல்லாத நிலையை புதுப்பிக்க பயன்படுத்தும், ஐ – 539 படிவத்தின் பிரீமியம் பரிசீலனை கட்டணம், 1.4௪ லட்சத்தில் இருந்து, 1.63 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல, மேலும் சில கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டணம், 2024 பிப்., 26ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.கடந்த, 2021 ஜூன் – 2023 ஜூன் வரை நிலவிய பணவீக்கம் காரணமாக, எச் 1 பி விசா உட்பட அனைத்து வகை விசாக்களின் விண்ணப்ப பரிசீலனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement