புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலையை ரூ.10 வரை குறைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2022 மே 22ம் தேதிக்கு பிறகு சென்னையில், பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 588வது நாளாக ஒரே விலையில் நீடிக்கிறது. இச்சூழலில், லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ஆங்கிலப் புத்தாண்டு பரிசாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகமும் பெட்ரோலிய அமைச்சகமும், ஆலோசனை நடத்தின. எவ்வளவு விலை குறைக்கலாம் என்பது குறித்த பரிந்துரையை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக மாதத்துக்கு இரண்டு முறை இந்த இரண்டு அமைச்சகங்களும் ஆலோசனை நடத்தி வந்துள்ளன. கடந்த 3 மாதங்களாக இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலர் முதல் 80 டாலருக்குள் உள்ளது. இதனால் விலை குறைப்பு குறித்து முடிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement