இஸ்லாமாபாத்: பயங்கரவாதி ஹபீஸ் சயீதை நாடு கடத்துவதற்காக இந்தியாவிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான், ஆனால் குற்றவாளிகளை நாடு கடத்துவது தொடர்பாக இரு நாடுகள் இடையே எந்த ஒப்பந்தமும் இல்லை என தெரிவித்து உள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீதை கைது செய்ய நீண்ட காலமாக மத்திய அரசு போராடி வருகிறது. பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வரும் அவரை, தங்களிடம் ஒப்படைக்கும்படி அந்நாட்டிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்தது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாக்ரா கூறுகையில், ஹபீஸ் சயீதை நாடு கடத்தும்படி இந்திய அதிகாரிகளிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. ஆனால், குற்றவாளிகளை நாடு கடத்துவது தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் எந்த ஒப்பந்தமும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement