அசாமுக்கு லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட போது பிஹார் பாலத்தின் அடியில் சிக்கியது விமானம்

பிப்ரகோதி: லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட விமானம் பிஹார் மாநிலத்தின் பிப்ரகோதி என்ற இடத்தில் பாலத்தின் அடியில் சிக்கியதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விமான சேவையில் இருந்து விடுவிக்கப்படும் விமானங்கள், பெரும்பாலும் உடைப்புக்குசெல்லும். சிலர் அந்த விமானங்களை வாங்கி, சுற்றுலாத் தலங்களில் ஓட்டல்களாகவும், கண்காட்சி அரங்குகளாகவும் மாற்றம் செய்துவர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்துகின்றனர்.

அவ்வாறு மும்பையில் வாங்கப்பட்ட பழைய விமானத்தின் உடல் பகுதி இறக்கைகள் அகற்றப்பட்டு, டிரெய்லர் லாரி மூலம் அசாம் கொண்டு செல்லப்பட்டது. பிஹார் மாநிலத்தின் பிப்ரகோதி பகுதியில் மோதிஹாரி என்ற இடத்தில் உள்ள ஒரு மேம்பாலத்தை, லாரி கடந்து செல்ல முயன்றபோது, விமானத்தின் உடல் பகுதி பாலத்தின் அடிப்பகுதியில் உரசி சிக்கியது.இதனால் அந்த தேசிய நெடுஞ் சாலையில் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பாலத்தில் அடியில் விமானம் சிக்கியிருந்த காட்சியை, அந்தவழியாக சென்றவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதால் அது வைரலாக பரவியது.

பின்னர், அந்த விமானம் பாலத்தின் அடியில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டதால், டிரெய்லர் லாரி தனது பயணத்தை தொடர்ந்தது. இதே போல், டிரெய்லர் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட விமானத்தின் உடல் பகுதி, சுரங்கப் பாதையில் சிக்கிய சம்பவம் ஆந்திர மாநிலம் பபத்லா மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.