
குக் வித் கோமாளி ஸ்ருதிகா அர்ஜூன் க்யூட் கிளிக்ஸ்
தமிழ் திரையுலகிற்கு ஸ்ரீ படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஸ்ருதிகா அர்ஜூன். தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு முற்றிலும் விலகினார். குக் வித் கோமாளி என்கிற சின்னத்திரை நிகழ்ச்சி ஸ்ருதிகாவுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. இதனையடுத்து ஸ்ருதிகாவின் இன்ஸ்டாகிராமிலும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் ஸ்ருதிகா போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்ஸ் குவிந்து வருவதுடன் பலரும் அவரை மீண்டும் நடிக்க சொல்லி கேட்டு வருகின்றனர்.