பஞ்சாப் பாடகர் சிது மூஸ்வாலா கொலை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி கோல்டி பிரர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளான். அவன் தற்போது கனடாவில் பதுங்கி இருக்கிறான். கனடாவுக்கும் இந்தியாவிற்கும் இடையே தற்போது நட்பு சரியில்லாமல் இருக்கிறது. காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு கனடா அடைக்கலம் கொடுப்பதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. அதேசமயம் கனடாவில் தங்களது நாட்டு பிரஜைகளை இந்திய உளவுத்துறையை சேர்ந்த ஆட்கள் கொலை செய்து வருவதாக கனடா குற்றம் சாட்டி இருக்கிறது. இதையடுத்து கனடாவில் பதுங்கி இருக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்களை மத்திய அரசு தேடப்படும் தீவிரவாதிகளாக அறிவித்து வருகிறது.

பஞ்சாப் பாடகர் கொலையில் தேடப்படும் கோல்டி பிரரை மத்திய அரசு தீவிரவாதியாக அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோல்டி பிரர் தலைமையிலான அமைப்பு தேசியவாத தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது, மிரட்டி பணம் பறிப்பது, கொலை செய்து விட்டதாக சோசியல் மீடியாவில் பதிவிடுவது போன்ற வேலையில் ஈடுபடுகின்றனர். அதோடு பஞ்சாப்பில் கோல்டி பிரர் மற்றும் அவனது கூட்டாளிகள் அமைதி, மத நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கை தீவிரவாத செயல்கள், கொலைகள், தேச விரோத செயல்கள் மூலம் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.
கோல்டி பிரர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக மத்திய அரசு நம்புகிறது. எனவே கோல்டி பிரர் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் தீவிரவாதியாக அறிவிக்கப்படுகிறான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கனடாவில் இந்தியாவை சேர்ந்த 25 பேர் தேடப்படும் நபர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் கோல்டி பிரரும் அடங்கும். கோல்டி பிரர் 2017-ம் ஆண்டு மாணவர் விசாவில் கனடாவிற்கு சென்றான். சதிந்தர்ஜித் சிங் என்ற கோல்டி பிரர் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் லாரன்ஸ் பிஷ்னோயுடன் சேர்ந்து கொண்டு மிரட்டி பணம் பறித்தல் போன்ற வேலையில் ஈடுபட்டு வருகிறான்.

அதோடு கொலைகளும் செய்கிறான். எந்த கொலையை செய்தாலும் அதனை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளான். அவர்களது செயல்கள் பாடகர் சிது மூஸ்வாலா படுகொலை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நடிகர் சல்மான் கானுக்கும் இவர் தொடர்ந்து கொலை மிரட்டை விடுத்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.