திருச்சி முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்க நேரில் வலியுறுத்தி உள்ளார். இன்று திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தின் புதிய முனையத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில், ”தொட்ட துறை அனைத்திலும் சிகரத்தைத் தொட்ட மாநிலம் […]
