
புது வருடபிறப்பில் ரத்னம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்
கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து ஹரி, விஷால் கூட்டணியில் உருவாகி வரும் 'ரத்னம்' என்கிற படத்தை தயாரிக்கின்றனர். ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து ரத்தம் தெறிக்க மோஷன் போஸ்டர் வெளியானது தொடர்ந்து இப்போது ரத்னம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் 'வாராய் ரத்னம்' என்கிற பாடல் புது வருடபிறப்பை முன்னிட்டு ஜனவரி 1ம் தேதி மாலை 7 மணியளவில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.