சியோல்: தென் கொரியாவின் எதிர்க்கட்சி தலைவர் லீ ஜே மியாங்யை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியாங் தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு சென்றார். அங்கு விமான நிலையத்தை அவர் சுற்றி பார்த்தார். அப்போது ஒருவர் அவரது கழுத்தின் இடது பக்கத்தில் கத்தியால் குத்தினார். இதையடுத்து லீ ஜே மியாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இவர் தென் கொரியாவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் தலைவராக உள்ளார். லீ ஜே மியாங் மர்மநபரால் தாக்கப்பட்ட பின் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படத்தில், ‛‛லீ ஜே மியாங் கண்களை மூடிக்கொண்டு தரையில் படுத்திருக்கிறார். அவரைச் சுற்றியுள்ள மற்றவர்களின் கைகள் அவரது கழுத்தின் பக்கவாட்டில் ஒரு கைக்குட்டையை வைத்து அழுத்துகிறார்கள்”.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement