
நயன்தாராவுக்கு அப்பாவாக நடிக்கும் சீமான்!
பிரதீப் ரங்கநாதன், நயன்தாரா, கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே .சூர்யா ஆகியோர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் எல்ஐசி. லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற முழு பெயரை கொண்ட இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் ஒரு தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
நயன்தாரா, பிரதீப் ரங்கநாதன் ஆகிய இருவரும் அக்காள் தம்பியாக நடிக்க அவர்களின் தந்தையாக சீமான் நடிப்பது தெரிய வந்துள்ளது. மேலும், விவசாயியாக சீமான் நடிக்கும் இந்த படம் தந்தை மகனுக்கிடையே நடக்கும் தினசரி போராட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகிறது.