ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒரே நாளில் லட்சாதிபதியான சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. நடந்து முடிந்த கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர், அவரது வீட்டைச் சுத்தம் செய்திருக்கிறார். அப்போது யதார்த்தமாக மேசையின் டிராயரை சுத்தம் செய்தபோது, அதில் ஒரு லாட்டரி டிக்கெட் கிடைத்திருக்கிறது. அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல், மற்ற வேலைகளைக் கவனித்திருக்கிறார்.

கிறிஸ்துமஸ் முடிந்து யதார்த்தமாக அந்த லாட்டரி டிக்கெட் குறித்த நினைவு வர, அதை எடுத்துப் பார்த்தபோது 2021-ம் ஆண்டு வாங்கிய லாட்டரி டிக்கெட் அது என்பதை அறிந்துகொண்டார். விளையாட்டாக அதன் பரிசுத்தொகை குறித்துத் தேடியபோது, எதிர்பாராதவிதமாக, அந்தப் பரிசு இவருக்கு விழுந்திருக்கிறது. உடனே அது குறித்து உரிய நிறுவனத்திடம் பேசியிருக்கிறார். அந்த லாட்டரி தொடர்பான எண்ணை உறுதி செய்துவிட்டு, அந்தப் பரிசை நேரில் வந்து வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த திடீர் ஆச்சர்ய பரிசு குறித்துப் பேசிய அந்தப் பெண், “என்னால் இதை நம்ப முடியவில்லை. மறந்த புதையலை மீண்டும் கண்டறிவதுபோல் உணர்கிறேன்” எனத் தெரிவித்தார். லாட்டரி டிக்கெட்டை சரிபார்ப்பதற்காக சமர்ப்பித்தபோது, சீட்டு பழுதடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு லாட்டரி டிக்கெட் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து, அவர்கள்
“2021-ம் ஆண்டிலிருந்து பரிசு 6,60,000 டாலரைப் பரிசு விழுந்தவர்கள் வந்து பெற்றுக்கொள்ளவே இல்லை. அதனால், டிசம்பர் 31- வரை அந்த தொகையைப் பெற்றுக்கொள்ளக் காலக்கெடு விதித்திருந்தோம். அந்த தேதிக்குள் இந்தப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்தப் பரிசுத் தொகை $110,000… தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.91,61,449.