தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ பட விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் தனுஷ் மற்றும் அவரின் இரு மகன்கள், பிரியங்கா மோகன், சிவஉராஜ்குமார், குமரவேல், காளி வெங்கட் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். மேலும், தனுஷின் ‘கர்ணன்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜும் விழாவில் கலந்துகொண்டுள்ளார்.

இவ்விழாவில் பேசிய மாரி செல்வராஜ், “தனுஷ் சாரோட ‘கேப்டன் மில்லர்’ லுக் பார்த்ததும் பயமாக இருந்துச்சு. கர்ணன்னுக்குப் பிறகு தனுஷ் சார்கிட்ட படம் பண்றதுக்கு சைன் பண்ணினேன்.ஆனா, நான் சில படங்களில் கமிட்டானதுல அது தள்ளிப்போயிருச்சு. அடுத்து தனுஷ் சார் கூட நான் பண்ணப்போற படம், ‘கர்ணன்’ படத்தைவிட பெருசா இருக்கணும்னு அதுக்கான வேலையத் தீவிரமா பாத்துக்கிட்டு இருக்கேன்.
நான் அதைப் பண்ணுவேன்னு தனுஷ் சாரும் என்னை பயங்கரமாக நம்புறாரு. என் கரியர்ல முக்கியமானப் படமா இருக்க மாதிரி பண்ணணும். எல்லாத்தையும் தாண்ட கூடிய படமா அதை பண்ணணும்.

‘சாணிக் காயிதம்’ படத்துக்கு முன்னாடியே அருண் மாதேஸ்வரேன்கூட படம் பண்றதாக தனுஷ் சார் சொன்னார். அப்போதான் புரிஞ்சது இந்த வாய்ப்புக்குப் பெரிய நம்பர்ஸ்லாம் வசூல் பண்ணியிருக்கணும்னு இல்ல. தனுஷ் சார் நம்புற சினிமாவை, அவரை திருப்திபடுத்துற மாதிரியான கதையைச் சொன்னாலே போதும்.
தூத்துக்குடில வெள்ளம் வந்தப்போ நான் அங்க போயிருந்தேன். அப்போ முதல் ஆளா எனக்குக் கால் பண்ணி விசாரிச்சவர் தனுஷ் சார்” என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் மாரி செல்வராஜ்.