வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான, ‘மிக்கி மவுஸ்’ சம்பந்தமான, ‘டிஸ்னி’ நிறுவனத்தின் 95 ஆண்டு கால காப்புரிமை காலாவதியாகிவிட்டது. இதனால் தற்போது மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தின் பொது பயன்பாட்டுக்கான தடை நீங்கியுள்ளது.
கடந்த 1928ம் ஆண்டு, ‘ஸ்டீம்போட் வில்லி’ என்னும் குறும்படம் வாயிலாக, மிக்கி மவுஸ் கதாபாத்திரம் அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டிஸ்னி’ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்க சட்டத்தின் படி, 95 ஆண்டுகள் வரை காப்புரிமை செல்லுபடியாகும்.
இதன் அடிப்படையில், குறிப்பிட்ட இந்த படத்தில் உள்ள மிக்கி மவுஸ்ஸின் கதாபாத்திரத்துக்கான டிஸ்னியின் காப்புரிமை, கடந்தாண்டு இறுதியுடன் காலாவதியானது.
இந்த மாதம் முதல், மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தின் பொதுப் பயன்பாட்டுக்கு எந்த வித தடையும் கிடையாது. இதற்கு டிஸ்னி இனி உரிமை கோர முடியாது.
எனினும் மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தின் பயன்பாட்டுக்கு முழுவதுமாக தடை நீங்கவில்லை. ‘ஸ்டீம்போட் வில்லி’ குறும்படத்தில் இடம்பெற்ற ‘கேப்டன் மிக்கி’ கதாபாத்திரத்தைத் தவிர, மற்ற அனைத்து மிக்கி மவுஸ் கதாபாத்திரங்களின் காப்புரிமையும், டிஸ்னி வசமே இன்னும் உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement