Ducati Bikes – 2024ல் இந்தியாவில் 8 பைக்குகளை வெளியிடும் டூகாட்டி

இந்திய சந்தையில் டூகாட்டி நிறுவனம் ஹைப்பர் மோட்டார்டு 698 மோனோ உட்பட பல்வேறு ஸ்பெஷல் எடிசன் என மொத்தமாக 8 பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வருவதுடன் புதிதாக இரண்டு டீலர்களை துவங்க திட்டமிட்டுள்ளது.

பீரிமியம் மோட்டார்சைக்கிள் சந்தையில் டூகாட்டி நிறுவனம் ஸ்டீரிட் ஃபைட்டர் V4 லம்போர்கினி, டெசர்ட்X ரேலி உட்பட பனிகேல், மான்ஸ்டர் டியாவேல் ஸ்பெஷல் எடிசன்களும் வரவுள்ளது.

Upcoming Ducati Bikes

சிறப்பு பதிப்பு பைக்குகள் இந்த ஆண்டிற்கான வரிசையில் மான்ஸ்டர் 30 ஆனிவெர்ஸ்ஸோ, டியாவேல் பென்ட்லி, பனிகேல் V4 SP2 30 ஆனிவெர்ஸ்ஸோ 916 மற்றும் பனிகேல் V4 ரேசிங் ரிப்பாலிக்கா 2023 ஆகியவை இந்த ஆண்டு இந்தியாவிற்கு வரவுள்ளது.

சமீபத்தில் வந்த ஹைப்பர் மோட்டார்டு 698 மோனோ இந்தியாவில் இரண்டாம் காலாண்டின் மத்தியில் விற்பனைக்கு வரக்கூடும். ஒற்றை சிலிண்டர் சூப்பர் குவாட்ரோ மோனோ 659cc லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 77.5hp பவர் மற்றும் 63Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. கூடுதல் பவரை  இது டெர்மிக்னோனி ரேசிங் எக்ஸாஸ்டுடன் இணைக்கப்படும் பொழுது அதிகபட்சமாக 84.5hp பவர் மற்றும் 67Nm டார்க் வெளிப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 2024ல் இரண்டாவது வாரத்தில் இருந்து புதிய பைக்குகளின் விலைகள் இந்நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுவதுடன் தொடர்ந்து முன்பதிவு துவங்க உள்ளது.

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.