அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மன்னார்குடி மதுவன சேத்திரம் என்று அழைக்கப்படும் மன்னார்குடி நகரின் கீழ்திசையில் அகத்திய நதியின் வடக்கிலும், அரிச்சந்திரா நதியின் தெற்கிலும் கன்னிபுரி என்ற கிராமம் இருக்கிறது. இப்போது இவ்வூர் குன்னியூர் எனப்படுகிறது. இங்கே “சீதளா பரமேசுவரி” என்ற பெயரில் காமாட்சியம்மன் குடிகொண்டிருக்கிறாள். “காம” என்ற சொல்லுக்கு “அன்பு” எனப் பொருள். “அக்ஷி” என்ற சொல்லுக்கு கண் என்று பொருள். “அன்பு பொங்கும் கண்களை உடையவள்” என்று காமாட்சிக்குப் பொருள் கொள்ளலாம். மற்றொரு பொருளின் படி […]
