வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ள நிலையில் ராமபிரான் அசைவம் சாப்பிட்டிருப்பார் என தேசியவாத காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஜிதேந்திர அவஹாத் கூறியுள்ளார். இவரது பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
மஹாராஷ்டிராவில் நடந்த விழாவில் ஜிதேந்திர அவஹாத் பேசியதாவது: ராமர் பலருக்கும் பொதுவானவர். பெரும்பான்மை மக்களால் கொண்டாடப்படுபவர். இவரை அடையாளம் காட்டி அனைவரையும் வெஜிடேரியன் உண்ண வைக்க முயற்சிக்கின்றனர். ராமர் 14 ஆண்டு காட்டில் தான் வாழ்ந்தார். இந்த காலத்தில் அவர் சைவ உணவாக தேடி அலைய முடியுமா ? இது சரியா, தவறா என்பதல்ல. இது பொதுமக்களுக்கான கேள்வியாக தொடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இவரது பேச்சு சமூகவலை தளங்களில் பரவியது. இந்த பேச்சுக்கு அயோத்தி ராமர் கோயில் அறக்ககட்டளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மும்பையில் ஹிந்து அமைப்புகள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். ஜிதேந்திர அவஹாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.கவினர் பலர் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.
இவரது பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து என தேசியவாத காங்கிரஸ் கட்சி லாவகமாக ஒதுங்கி கொண்டது.
மன்னிப்பு கூறினார்!
இதற்கிடையே எனது பேச்சு யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ஜிதேந்திர அவஹாத் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement