வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: வடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் ரஷ்யாவின் கின்சால் ஏவுகணைகள், உக்ரைனின் சீவ், கார்சீவ் ஆகிய நகரங்கள் மீது நடத்திய தாக்குதலில் வானுயர கட்டங்கள் தரமட்டமாகின. இதில் சிக்கி பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இது போன்ற ஏவுகணைகள் ஒலியை விட 10 மடங்கு வேகத்துடன் பயணிக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான மாஸ்கோவின் போரில் வடகொரியா வழங்கிய ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியதாக அமெரிக்க குற்றம்சாட்டியுள்ளது. இதனை தேசிய அமெரிக்க தேசி பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி உறுதி செய்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement