மும்பை, மும்பையைச் சேர்ந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி.
இவர் பாகிஸ்தானின் கராச்சியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
தாவூத் இப்ராஹிம் குடும்ப உறுப்பினர்களுக்கு மஹாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் நான்கு சொத்துக்கள் உள்ளன.
அவற்றை அந்நிய செலாவணி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ், நேற்று மும்பையில், மத்திய வருவாய் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் அதிகாரிகள் ஏலம் விட்டனர்.
இரண்டு சொத்துக்களை ஏலம் கேட்க யாரும் முன் வரவில்லை. மற்ற இரண்டு சொத்துக்களுக்கான ஏலத்தில் மூன்று பேர் பங்கேற்றனர். அதில், 15,440 ரூபாய் குறைந்தபட்ச கேட்பு விலை நிர்ணயிக்கப்பட்ட 1,780 சதுரடி விவசாய நிலம், 2.01 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. 1.56 லட்சம் ரூபாய் குறைந்தபட்ச கேட்பு விலை நிர்ணயிக்கப்பட்ட மற்றொரு விவசாய நிலம், 3.28 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
பாதுகாப்பு கருதி ஏலம் எடுத்தவர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement