Royal Enfield Hunter 350 On road Price – ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை மற்றும் சிறப்புகள்

புதிதாக இரண்டு நிறங்களை பெற்றுள்ள ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை பற்றி அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன் ரோடு விலையை அறிந்து கொள்ளலாம்.

250-750cc வரையில் உள்ள நடுத்தர மோட்டாரசைக்கிள் சந்தையில் முதன்மையாக உள்ள ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 பைக்கினை தொடரந்து ஹண்டர் 350 இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச சந்தையிலும் HNT 350 என்ற பெயரில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Royal Enfield Hunter 350

ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெற்று J-சீரிஸ் 350cc என்ஜின் கொண்டுள்ள ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் மாடல் அதிகபட்சமாக 6,100 rpmல் 20.2 bhp பவருடன்  27 Nm டார்க் ஆனது 4,000 rpmல் வழங்குகின்றது. இந்த மாடலில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. குறிப்பாக மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் அனுபவத்தை வழங்கும் உள்ள ஹண்டரின் மைலேஜ் லிட்டருக்கு 36.5 கிமீ வழங்கும் என ARAI சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

மிக சிறப்பான j-சீரிஸ் என்ஜின் முழுமையாக மேம்படுத்தப்பட்டு சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வழங்கும் வகையில் அதிகப்படியாக மணிக்கு 80-90கிமீ வேகத்தில் கூட பெரிய அளவில் கைகளுக்கு அதிர்வுகள் இல்லாமலும் ஆர்இ ஹண்டர் 350 இலகுவாக மணிக்கு 114 கிமீ வேகத்தை எட்டுவதாக அமைந்துள்ளது.

royal enfield hunter 350

13 லிட்டர் கொள்ளளவு பெற்ற பெட்ரோல் டேங்கில் மிக சிறப்பான பாடி கிராபிக்ஸ் வேரியண்ட் மற்றும் நிறங்களின் அடிப்படையில் RE லோகோ மற்றும் RIDE போன்ற வார்த்தைகளை பெற்று 2.6 லிட்டர் ரிசர்வ கொள்ளளவுடன் கெர்ப் எடை 181 கிலோ ஆகும்.

ஹண்டரில் உள்ள மெட்ரோ மற்றும் ரெட்ரோ இருவிதமான வேரியண்டுகளுக்கும் பொதுவாக உள்ள அம்சங்களில் ட்வீன் டபூள் ஸ்பின் ஃபிரேமில் வடிவமைக்கப்பட்டு டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்று பின்புறத்தில் அட்ஜெஸ்டபிள் ட்வீன் ஷாக் அப்சார்பர் கொண்டு 1370 மிமீ வீல்பேஸ், 150.5 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ், இலகுவாக இருக்கையை அனுக 795 மிமீ உயரம் பெற்றுள்ளது.

வட்ட வடிவத்திலான டிஜி அனலாக் முறையிலான கிளஸ்ட்டரை பெற்று கூடுதலாக ப்ளூடூத் இணைப்பின் மூலம் டர்ன் பை டர்ன் டிரிப்பர் நேவிகேஷனை கொண்டுள்ள ராயல் என்ஃபீல்டு ஹண்டரில் 17 அங்குல வீல் பெற்று கூடுதலாக யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளது.

ஹண்டர் ரெட்ரோ Vs ஹண்டர் மெட்ரோ

ஹண்டர் 350 ரெட்ரோ வேரியண்டில் ஸ்போக்டூ வீல் முன்புறத்தில் 100/80 – 17 அங்குல டயருடன் 300 மிமீ டிஸ்க் பிரேக்குடன் பின்புறத்தில் 120/80 – 17 டயருடன் 153 மிமீ டிரம் பிரேக்குடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் ஹாலஜென் பல்புகளை பெற்று ஃபேக்ட்ரி கருப்பு நிறத்தை மட்டுமே பெற்றுள்ளது.

மெட்ரோ வேரியண்டில் வீல் முன்புறத்தில் 110/70 – 17 அங்குல டயருடன் 300 மிமீ டிஸ்க் பிரேக்குடன் பின்புறத்தில் 140/70 – 17 டயருடன் 270 மிமீ டிரம் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் ஹாலஜென் பல்பு, எல்இடி டெயில் லைட் பெற்று டேப்பர் பிரிவில் கிரே, வெள்ளை, ஆரஞ்ச் மற்றும் பச்சை, ரீபெல் பிரிவில் கருப்பு, சிவப்பு மற்றும் நீலம் என மொத்தமாக 7 நிறத்தை பெற்றுள்ளது.

re hunter 350 7 colours

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் போட்டியாளர்கள் யார் ?

ரூ.1.50 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் துவங்குகின்ற ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் நேரடியாக 350சிசி என்ஜின் பிரிவில் இல்லையென்றாலும், கிளாசிக் 350, புல்லட் 350 ஆகியவற்றை விட சற்று விலை குறைவாகவும், ரெட்ரோ ஸ்டைலை பெற்ற டிவிஎஸ் ரோனின் 225 மற்றும் குறைந்த விலையில் உள்ள கவாஸாகி W175 ஆகியவற்றை எதிர்கொண்டாலும் தனித்துவமான ரோட்ஸ்டெர் ஸ்டைலுடன் சிறப்பான பெர்ஃபாமென்ஸ், மைலேஜ், இலகுவாக அனுகும் வகையிலான வடிவமைப்பு கம்பீரமான ராயல் என்ஃபீல்டு தோற்றத்தை பெற்று ஹண்டர் 350 பைக் கிளாசிக்கிறகு அடுத்தப்படியாக சிறப்பான விற்பனை வேட்டையை நடத்தி வருகின்றது.

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350

Royal Enfield Hunter 350 on road price in Tamil Nadu

புதிதாக இரண்டு நிறங்களை பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் தமிழ்நாட்டின் ஆன் ரோடு விலை ₹ 1.75 லட்சம் முதல் ₹ 2.08 லட்சம் வரை உள்ள விரிவான பட்டியல் அட்டவனையில் பின்வருமாறு-

RE ஹண்டர் 350 ex-showroom on road price
Retro Factory Black ₹1,49,900 ₹ 1,74,552
Metro Dapper ₹ 1,69,656 ₹ 2,01,754
Metro Rebel ₹1,74,655 ₹ 2,07,441

(All price TamilNadu)

கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆன் ரோடு விலை கூடுதல் ஆக்சசெரீஸ் சேர்க்கப்படும் பொழுது மாறக்கூடும் என்பதனை அறிந்து கொள்ளுங்கள்

royal enfield hunter 350 bike

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.