வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பிரிட்டோரியா : எட்டு ஆண்டு சிறைத்தண்டனைக்குப் பின் பிஸ்டோரியஸ் பரோலில் வெளியே வந்தார்.
தென் ஆப்ரிக்க மாற்றுத் திறனாளி தடகள வீரர் பிஸ்டோரியஸ் 37. கடந்த 2013, காதலர் தினத்தில் (பிப்., 14), தனது வீட்டில் காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை சுட்டுக் கொன்றார்.
இவருக்கு 13 ஆண்டு, 5 மாதம் தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 2014, அக்டோபரில் சிறை சென்றார். பின் 2015 அக்டோபரில் வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டார். 2016, ஜூலை முதல் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார். இங்கு ‘டிராக்டர்’ ஓட்டினார், நுாலகத்தில் பணிபுரிந்தார், சக கைதிகள் அறைகளை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டார்.
இதனிடையே, தென் ஆப்ரிக்க சட்டப்படி தண்டனையில் பாதி நாள் சிறையில் இருந்தால் போதும்,பின் பரோலில் வெளியே வரலாம். இதன் படி, 8 ஆண்டுக்கு மேல் சிறையில் இருந்தபிஸ்டோரியசிற்கு பரோல் வழங்கப்பட்டது.நேற்றுசிறையில் இருந்து வெளியே வந்தார்.
இவர் பிரிட்டோரியாவின் புறநகர் பகுதியில் உள்ள தனது மாமா வீட்டுக்கு சென்றார். தண்டனை காலம் முடியும் வரை (2029) இங்கு தான் தங்கவுள்ளார். இக்காலகட்டத்தில் மீடியாவை சந்திக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது உட்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement