Defamation of Prime Minister Modi: -Maldives Ministers sacked | பிரதமர் மோடி குறித்து அவதூறு: -மாலத்தீவு அமைச்சர்கள் நீக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மாலி:பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்கள் மரியம் ஷியுனா, மால்ஷா ஷரீஃப், மசூம் மஜீத் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி லட்சத்தீவில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அவதூறு கருத்து தெரிவித்திருந்தனர். “உயிர் காக்கும் உடை அணிந்த மோடி இஸ்ரேலின் கைப்பாவை” என மரியம் கூறியிருந்தார்.

மாலத்தீவு அரசு அறிக்கை

“வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட நபர்களுக்கு எதிராக சமூக ஊடக தளங்களில் தரக்குறைவான கருத்துக்கள் இருப்பதை மாலத்தீவு அரசாங்கம் அறிந்திருக்கிறது. இந்தக் கருத்துக்கள் தனிப்பட்டவை மற்றும் மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை.லும், இதுபோன்ற தரக்குறைவான கருத்துக்களை கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயங்க மாட்டார்கள் என மாலத்தீவு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மாலத்தீவு முன்னாள் அதிபர் கண்டனம்

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவின் மந்திரியான மரியம் ஷியூனா மற்றும் ஆளும் கட்சியினர் பலர் கேலி செய்ததையடுத்து மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கண்டனம் தெரிவித்துள்ளார். மந்திரி மரியம் ஷியூனா பயன்படுத்தும் மொழி “பயங்கரமானது”. மாலத்தீவின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா “நெருங்கிய கூட்டாளி” என்று கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.