New York: Ram Temple Kumbabhishek ceremony telecast at Times Square | நியூயார்க் : டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஒளிபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நியூயார்க்: வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை டைம்ஸ் சதுக்கத்தில் ஒளிபரப்ப உள்ளது.

அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட உள்ளது. விழா ஏற்பாடுகள் அனைத்தும் பிரதமர் மோடி மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

கும்பாபிஷேக விழாவிற்கு முன்னதாக நடத்தப்படும் வேத சடங்குகள் வரும் 16-ம் தேதி முதல் துவங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதனிடையே கும்பாபிஷேக விழாவை நாடு முழுவதும் உள்ள மக்கள் காணும் வகையில பிரமாண்ட திரைகள் அமைத்து நேரடியாக ஒளிபரப்ப பா.ஜ.,கட்சியினர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலமாகவும் கும்பாபிஷேக விழா ஒளிபரப்பப்படும் என கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.