வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ‛‛ கர்நாடக முதல்வர் சித்தராமையா ஐ.எஸ்., அமைப்பை போன்று ஆட்சியை நடத்துகிறார்” என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விமர்சனம் செய்துள்ளார்.
வரும் ஜன., 22ம் தேதி அயோத்தியில் நடக்க உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடத்த 34,000 கோயில்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‛‛ அவர்களுக்கு ஞானம் உதித்துவிட்டது” என நிருபர்கள் சந்திப்பில் பதில் அளித்தார்.
முன்னதாக அவர் கூறுகையில், ”கர்நாடக முதல்வர் சித்தராமையா ஐ.எஸ்., அமைப்பை போன்று ஆட்சியை நடத்துகிறார் என ஏற்கனவே நான் கூறியுள்ளேன். நான் கூறியதை மறுக்கவில்லை” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement