டாக்டா: வங்கதேசத்தில் நடந்த பொதுத்தேர்தலில்,3ல் 2 பங்கு இடங்களை பிடித்து ஷேக் ஹசீனா கட்சி வெற்றி பெற்றது. 5வது முறையாக ஷேக் ஹசீனா பிரதமராகிறார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், ஆவாமி லீக் கட்சித் தலைவரான ஷேக் ஹசீனா, பிரதமராக உள்ளார். இந்நிலையில், நேற்று வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தலை முக்கிய எதிர்க்கட்சியான, வங்கதேசம் தேசியவாத கட்சி புறக்கணித்த நிலையில், ஓட்டுப் பதிவு மிகவும் மந்தமாகவே நடந்தது.
இதில் ஹசீனா பெற்ற ஓட்டுக்கள் 2 லட்சத்து 49 ஆயிரத்து 965. அவரை எதிர்த்து போட்டியிட்ட வங்காளதேச சுப்ரீம் கட்சி வேட்பாளர் நிஷாம் உதின் லஷ்கர் வெறும் 469 ஓட்டுக்கள் பெற்றிருந்தார்.
இதனால் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மொத்தமுள்ள 300 இடங்களில் 200 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து 5வது முறையாக ஷேக் ஹசீனா பிரதமராகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement