டேராடூன் டேராடூனில் குளோரின் வாயு கசிவால் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாஜ்ரா பகுதியில், திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த குளோரின் சிலிண்டர்களில் இருந்து வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயு காற்றில் கலந்து அப்பகுதி முழுவதும் பரவியதால் அங்குள்ள மக்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு இது குறித்த உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே மத்திய […]
