வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: லட்சத்தீவில் சுற்றுலாவை பிரபலப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அங்குள்ள மினிகாய் தீவில் போர் விமானங்கள் மற்றும் வணிக ரீதியில் பயன்படுத்தும் வகையில், விமான நிலையம் ஒன்றை அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
லட்சத்தீவின் மினகாய் தீவில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக கடந்த காலங்களில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை பாதுகாப்பு படையும் பயன்படுத்தும் வகையில் விமான தளம் அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது.
இங்கு விமான தளம் அமைப்பது குறித்து முதலில் இந்திய கடலோர காவல்படை பாதுகாப்பு அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தது. தற்போது, அதனை விமானப்படை பயன்படுத்தும் வகையில் விமான நிலையமாக அமைப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறது.
இங்கு விமான நிலையம் அமைப்பது மூலம் அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் இந்தியா கண்காணிப்பை தீவிரப்படுத்த முடியும். சுற்றுலாவை மேம்படுத்த முடியும். தற்போது, லட்சத்தீவின் அகாட்டி தீவில் மட்டும் தான் விமான தளம் உள்ளது. இங்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் பயணிகளை கையாள முடியும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement