Kangana Ranaut: `பணம் கொடுத்து இதைச் செய்கிறார்கள்'- படங்களை சாடிய கங்கனா

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அனிமல்’.

அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இப்படத்தை இயக்கியிருக்கிறார். அனில் கபூர், பாபி தியோல் மற்றும் ட்ரிப்டி டிம்ரி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.  இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்திருந்தாலும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட திரைப்படமாக இருக்கிறது என்று கடுமையான விமர்சனங்களையும் பெற்றது.  

அனிமல் திரைப்படம்

குறிப்பாக இளைய தலைமுறையினரின் மனதில் தவறான தாக்கத்தை ஏற்படுத்துவதாகப் பலரும் கூறி வந்தனர். இந்த சர்ச்சை பாலிவுட் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பெரும் பேசுபொருளாகி இருந்தது. இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத்தும் மறைமுகமாக இப்படத்தை சாடி இருக்கிறார்.

ட்விட்டர் பயனர் ஒருவர் கங்கனாவின் தேஜஸ் படத்தைப் பார்த்துவிட்டு, “படம் நன்றாக இருக்கிறது. கங்கனா நடித்த சிறந்தத் திரைப்படம் இது. ஆனால் இப்படம் ஏன் சரியாக ஓடவில்லை என்று தெரியவில்லை. கரண் ஜோஹர் மற்றும் சில கும்பல்கள் அவரது கரியரை அழிக்க விரும்புகின்றனர்”என்று பதிவிட்டிருந்தார். அதனை ரீ ட்வீட் செய்து பதிலளித்த கங்கனா, “நிறைய பணங்களைச் செலவளித்து என் படங்களுக்கு எதிர்மறையான சில விஷயங்களை செய்கிறார்கள்.

நான் கடுமையாகப் போராடி வருகிறேன். ஆனால் பெரும்பாலான பார்வையாளர்கள் கூட பெண்களை பாலியல் பண்டமாகக் கருதி அடித்து துன்புறுத்துவது போன்ற  படங்களைத்தான் ஊக்கப்படுத்துகிறார்கள். இதுபோன்ற படங்கள் பெண்கள் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் படங்களைப் பாதிக்கிறது” என்று  அனிமல் படத்தை மறைமுகமாக சாடி இருக்கிறார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.