வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹியூஸ்டன்: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹியூஸ்டன் நகரில் ஹிந்து மதத்தினர் சார்பில் 216 கார்களில் பேரணியாக சென்றனர்.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ல் திறந்து வைக்கிறார். இதனால் அயோத்தி மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இப்போதே ஹிந்துக்கள் கொண்டாட்டத்தை துவக்கியுள்ளனர்.

இந்த கொண்டாட்டம் தற்போது அமெரிக்காவிலும் களைகட்ட துவங்கியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹியூஸ்டன் நகரில் ஹிந்து மதத்தினர் சார்பில் 216 கார்களில் இந்தியா தேசியக்கொடி, அமெரிக்கா கொடி மற்றும் காவிக் கொடிகளுடன் ‛ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் எழுப்பியவாறு பேரணியாக சென்றுள்ளனர். ஹியூஸ்டனில் உள்ள ஸ்ரீ மீனாட்சி கோயிலில் துவங்கிய பேரணி 100 கிலோ மீட்டர் தூரம் பயணித்து செல்லும் வழியில் உள்ள 11 கோயில்களை கடந்து ரிட்ச்மவுண்ட் பகுதியில் உள்ள ஸ்ரீ சாரதாம்பா கோயிலில் நிறைவடைந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement