ராமர் கோவிலுக்கு ஹனுமானின் கைங்கர்யம்

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் பபடம் 'ஹனு மான்'. இதில் தேஜா சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர், வினய் ராய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் கதைப்படி ராமரின் தீவிர பக்தரான ஹனுமனின் சக்தி பெற்ற ஒரு இளைஞன் மக்களுக்காக போராடுவதுதான் கதை. ஹனுமன் தொடர்புடைய இந்த படத்தின் மூலம் அயோத்தியில் கட்டப்பட்டு, கும்பாபிஷேக விழா நடக்கும் நேரத்தில் ராமர் கோவிலுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்ய முன் வந்திருக்கிறது படக்குழு. அதன்படி இப்படத்தினை காண்பதற்காக விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஐந்து ரூபாயை ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள்.

'ஹனு மான்' படக் குழுவினருக்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் ஆன்மிக அன்பர்களும் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.