வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் பேராசிரியர் கை துண்டித்த வழக்கில் 13 ஆண்டுகளுக்கு பின் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் கைது செய்தனர்
கடந்த 2010- ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி கேரளத்தின் தொடுபுழா பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் டி.ஜே. ஜோசப், சம்பவத்தன்று கும்பல் தாக்கி கையை துண்டித்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பி.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஏற்கெனவே 13 போ் குற்றவாளிகள் என்று தீா்ப்பளிக்கப்பட்டது. 11 போ் கைது செய்யப்பட்டனர். கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கடந்தாண்டு ஜூலையில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 5 போ் விடுவிக்கப்பட்டனா். இந்நிலையில் இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்கு பின் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement