வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அமலாக்கத்துறை புதிய இடைக்கால இயக்குநராக ராகுல் நவீன், அதிகாரப்பூர்வ இயக்குனராக இன்று அறிவிக்கப்பட்டார்.
1984ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ்., கேடரான சஞ்சய் குமார் மிஸ்ரா கடந்த 2018-ம் ஆண்டு முதல்
அமலாக்கத்துறை இயக்குநராக இப்பதவியில் இருந்து வருகிறார். இவரது பதவி காலத்தை நீட்டித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து இவரது பதவி காலம் கடந்தாண்டு செப்.15-ல் நிறைவடையும் என
அறிவித்தது.
இந்நிலையில் புதிய இயக்குநராக ராகுல் நவீன் என்பவரை தற்காலிக இயக்குனராக கடந்தாண்டு செப்டம்பரில் மத்திய அரசு நியமித்தது.இந்நிலையில் ஏசிசி எனப்படும் மத்திய அமைச்சரவையின் நியமன கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் அமலாக்கத்துறை இடைக்கால இயக்குநராக பணியாற்றிவரும் ராகுல் நவீன், அதிகாரப்பூர்வமாக புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
1993-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ்., கேடரான இவர் அமலாக்கத்துறையில் பல்வேறு உயர் பதவிகள் வகித்து வந்துள்ளார். புதிய இயக்குநராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement