2024 பஜாஜ் சேட்டக் vs ஏதெர் 450S vs டிவிஎஸ் ஐக்யூப் Vs ஓலா S1 ஏர் – ஒப்பீடு

பஜாஜ் ஆட்டோ வெளியிட்ட 2024 சேட்டக் உட்பட இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஏதெர் 450S vs டிவிஎஸ் ஐக்யூப் Vs ஓலா S1 ஏர் உள்ளிட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒப்பீடு செய்து பல்வேறு முக்கிய தகவல்களை அறிந்து கொள்வதனால் இலகுவாக மின் ஸ்கூட்டரை தேர்ந்தெடுக்கலாம்.

குறிப்பாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டும் ஒப்பீடுவதற்கான காரணம் இந்தியாவின் விற்பனையில் முதல் நான்கு இடங்களை கைப்பற்றி 80 % கூடுதலான சந்தை மதிப்பினை இந்நிறுவனங்கள் கொண்டுள்ளது.

2024 Bajaj Chetak vs Ather 450s vs TVS iQube vs Ola S1 Air

புதிதாக வந்துள்ள 2024 சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.9kwh அர்பேன் மற்றும் 3.2kwh பிரீமியம் என இரு விதமான வேரியண்ட் பெற்று 118 கிமீ முதல் 127 கிமீ வரையிலான ரேஞ்ச் வெளிப்படுத்துகின்றது.  அர்பேன் வேரியண்ட் ஆனது 85-90 கிமீ வரை உண்மையான ரேஞ்ச் மற்றும் புதிய பிரீமியம் ரைடிங் ரேஞ்ச் 105 -110 கிமீ வரை வழங்கலாம்

சமீபத்தில் விலை குறைக்கப்பட்ட ஏதெர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.9kwh லித்தியம் ஐயன் பேட்டரி பெற்று சிங்கிள் சார்ஜில் 115 கிமீ ரேஞ்ச் கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏதெர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஈகோ மோடில் 90 கிமீ வரை உண்மையான ரேஞ்ச் கிடைக்கும்.

iqube escooter

அடுத்து, டிவிஎஸ் மோட்டாரின் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.04 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிமீ வரையில் பயணிக்க இயலும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையான ரேஞ்ச் 80-85 கிமீ வரை கிடைக்கின்றது.

இறுதியாக, இந்தியாவின் முதன்மையான ஓலா நிறுவன S1 Air மின்சார ஸ்கூட்டரில் 3kwh லித்தியம் ஐயன் பேட்டரி ஆனது சிங்கிள் சார்ஜில் 151 கிமீ ரேஞ்சு வழங்கும் என சான்றயளிக்கப்பட்டுள்ளது. உண்மையான ரேஞ்ச் 100 -105 கிமீ வரை கிடைக்கலாம்.

தயாரிப்பாளர் பேட்டரி, ரேஞ்ச்
2024 Bajaj Chetak Premium 2.9Kwh Battery, 113km/charge

True Range 80-85 km

2024 Bajaj Chetak Urbane 3.2kwh Battery, 127Km/charge

True Range 105 km

Ather 450S 2.9Kwh/h Battery, 115km/charge

True Range 90-95 km

TVS iqube 3.04kwh Battery , 100Km/chrage

True Range 75-85 km

Ola S1 air 3.kwh battery, 151km/charge

True Range 100 km

இங்கே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள அனைத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் பொதுவாக 85 முதல் 110 கிமீ வரையிலான மாறுபட்ட ரேஞ்ச் கொடுக்கின்றது. மற்றபடி, ஸ்டைலிங் அம்சங்கள் டாப் ஸ்பீடு உள்ளிட்டவற்றில் மாறுபடுகின்றது.

ather 450s escooter

குறிப்பாக இந்த நான்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓலா எஸ்1 ஏர் டாப் ஸ்பீடு 90 கிமீ ஆகும். அடுத்து, ஏதெர் 450எஸ் மணிக்கு 90 கிமீ, டிவிஎஸ் ஐக்யூப் மணிக்கு 78 கிமீ மற்றும் சேத்தக் டாப் ஸ்பீடு மணிக்கு 63 கிமீ மற்றும் 73 கிமீ ஆகும்.

பல்வேறு கூடுதல் கனெக்ட்டிவிட்டி வசதிகள் வழங்குவதில் ஏதெர் 450S மாடல் 7 அங்குல டிஸ்பிளே கிஸ்ட்டர் பெற்று ரைடிங் மோடுகள், ஏதெர் அப்டேட், பேட்டரி பாதுகாப்பு ஆகியவற்றுடன் பல்வேறு ஸ்மார்ட்போன் இணைப்பு தொடர்பான வசதிகளில் முன்னிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து டிவிஎஸ் ஐக்யூப், சேட்டக் டெக்பேக் ஆப்ஷன் மற்றும் ஓலா S1 ஏர் உள்ளது.

அடுத்த மிக முக்கியமாக சார்ஜிங் முறையில் 0-100 % எட்டுவதற்கு தேவைப்படுகின்ற சேட்டக் 4 மணி நேரம் 30 நிமிடங்களும், ஏதெர் 450S ஸ்கூட்டருக்கு 8 மணி நேரம் 36 நிமிடங்கள் தேவைப்படும், ஓலா எஸ்1 ஏர் 5 மணி நேரம் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் 0-80 % ஏற  4 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும்.

2024 bajaj chetak e scooter rear

2024 Bajaj Chetak vs Ather 450s vs TVS iQube vs Ola S1 Air onroad price in Tamilnadu

ஒப்பீடு செய்யபட்டுள்ள நான்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் குறைந்த ஆன் ரோடு விலை கொண்ட மாடலாக ஏதெர் 450எஸ் விளங்குகின்றது.

e-Scooter Price
Bajaj Chetak ₹ 1,24,067 – ₹ 1,45,124
Ather 450s ₹ 1,16,500
Ola S1 Air ₹ 1,33,056
TVS iQube ₹ 1,35,137 – ₹ 1,40,057

(கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல்)

ஒரு சில மாடல்களில் கூடுதலாக கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெறுவதற்கு கூடுதலாக ஏதெரில் புரோ பேக், சேட்டக் மாடலில் டெக்பேக் போன்றவற்றை வாங்குவதற்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.

Ola S1 Air force neon colour

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.