ஹாவேரி வேற்று மத ஆண் நண்பருடன் லாட்ஜில் இருந்த, முஸ்லிம் பெண்ணை அவரது சமூக வாலிபர்கள் ஏழு பேர் கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது.
ஹாவேரி மாவட்டம், ஹனகல் டவுனில் உள்ள லாட்ஜுக்கு, கடந்த 8ம் தேதி 30 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் பெண் ஒருவர், வேறு மதத்தைச் சேர்ந்த ஆண் நண்பருடன் சென்றார். இருவரும் ஒரு அறையில் தங்கி இருந்தனர்.
இது பற்றி அறிந்த, பெண் சார்ந்த சமூக வாலிபர்கள் ஏழு பேர், பெண்ணும், அவரது நண்பரும் தங்கி இருந்த அறைக்கு சென்று, அவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர்.
அப்போது, அப்பெண்ணின் நண்பர் தப்பி ஓடி விட்டார்.
அந்த பெண்ணை லாட்ஜில் இருந்து வெளியே இழுத்து வந்து, ஏழு வாலிபர்களும் தாக்கினர். இது தொடர்பான ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்நிலையில், அந்த பெண்ணை, ஏழு வாலிபர்களும் காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்ற இன்னொரு வீடியோ வெளியாகி உள்ளது.
இந்நிலையில், அப்பெண்ணின் கணவர், ஹனகல் போலீசில் அளித்த புகாரில், ‘என் மனைவியை, எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஏழு வாலிபர்கள் காரில் கடத்தி சென்று, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
‘மேலும், அவரது அந்தரங்க உறுப்பிலும் தாக்கி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
தாக்குதலுக்கு ஆளான பெண்ணும், வாலிபர்கள் தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்