உழைப்பு, கடும் முயற்சியால் வளர்ந்தேன் : ரகுல் ப்ரீத் சிங்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் யுவன், தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே. படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் 'அயலான்' படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகி உள்ளது.

'யாரிவன்' என்ற படம் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமானார். இந்த படம் 2014ல் வெளியானது. படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அந்த படத்தில் நடித்தபோது இருந்த தனது தோற்றத்தையும் வெளியிட்டு அவர் எழுதியிருப்பதாவது:

நான் எத்தனையோ அழகான கனவுகளோடு இளம் கதாநாயகியாக பத்து ஆண்டுகளுக்கு முன் ஹிந்தி பட உலகில் அடி எடுத்து வைத்தேன். எனது உழைப்பு, கடுமையான முயற்சியால் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். ஒரு நடிகையாக நான் சாதிக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறது. இன்னும் உற்சாகமாக பணியாற்றி சாதிப்பேன். நான் இந்த நிலைக்கு வந்ததற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி'' என்று எழுதியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.