‘ஓங்காரத்துள் ஒளிக்கும் உள்ளொளியாய், ஐந்தொழிற்கும் நீங்காத பேருருவாய் நின்றானே!’ – ‘ஓம்’ காரத்தின் உள்ளொளியாய் விளங்குபவன் முருகன் என்கிறார் குமரகுருபரர் கந்தர் கலிவெண்பாவில். ‘வேத ஓம் எல்லாம் விளங்க உணர்த்தி’ என்ற வரியில் சிவனுக்கே பிரணவ தத்துவத்தை உபதேசித்தவர் முருகப்பெருமான் என்கிறார். கந்தனை வணங்கினால் சகலரையும் வணங்கிய புண்ணியம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு. கந்தனின் சகலமும் அடங்கிவிடுகிறது. முருகனே பரப்பிரம்மமானதால் வேத மாதாவே முருகனைப் பற்றி எதுவும் கூறாமல் ‘சுப்பிரமண்யோம்’ என்று மும்முறை கூறி வணங்கி நின்றுவிட்டாள் என்கின்றன நூல்கள். கந்தனை வணங்கி சகலமும் அடையலாம்.
கொல்லாபுரத்தில் விளங்கும் திருமகளை அகத்தியர் பூஜித்து எல்லாச் செல்வமும் தந்தருள வேண்டினாராம். திருமகள் உனக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்க வல்லவன் முருகவேளே என்றாளாம். அகத்தியரும் பொதிகை மலையில் முருகனை வழிபட்டு எல்லாச் செல்வமும் அடைந்தார் என்பது புராணம் கூறும் தகவல். பொதிகை மலையின் சிகரங்கள் பலவும் முருகப்பெருமான் தங்கி உலாவிய திருவிடங்களாக அமைந்துள்ளன. அதில் தோரணமலை மிகச் சிறப்பான தலம் எனலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
தென்காசி – கடையம் பக்கத்தில் அமைந்துள்ளது தோரணமலை. இங்குள்ள முருகப்பெருமான் ஆலயம் நன்மைகள் பல அருளும் பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது. பொதிகை தீரத்தையொட்டிய தோரணமலையில் அகத்தியர் மற்றும் தேரையரின் அருள் சாந்நித்தியம் நிரம்பி உள்ளது என்கிறார்கள் தோரணமலை பக்தர்கள்.
அகத்தியரின் சித்தப்படி அவரின் சீடரான தேரையர் இங்கே மருத்துவ சாலை அமைத்துப் பணிசெய்தது, இத்திருத்தலம் பெற்ற தனிச் சிறப்பாகும்.
மனித குலம் நோயில்லாத வாழ்வு வாழத் தங்களையே அர்ப்பணித்தவர்கள் அகத்தியர், தேரையர் போன்ற சித்த புருஷர்கள். அப்படியானவர்கள், அனுபவபூர்வமாக கண்டு சொன்ன தலங்களுக்குச் சென்று வழிபடுவதால், நம்முடைய உடற்பிணிகள் மட்டுமல்ல மனப்பிணிகளும் நீங்கும்; வாழ்வு அர்த்தமுள்ளதாகும்.
அவ்வகையில் ஒவ்வொருவரும் அவசியம் தரிசித்து வழிபடவேண்டிய தலம் தோரணமலை. பெளர்ணமி தினங்களில் இதுபோன்ற மலைத் தலங்களை கிரிவலம் வந்து வழிபடுவதால், நம் பாவங்கள் அனைத்தும் நீங்கும். முன்வினை காரணமாக நம்மை சூழ்ந்துள்ள தீமைகளும் தோஷங்களும் விலகும் என்பதுவும் சித்தர்களின் வழிகாட்டலே. குறிப்பாக தை பெளர்ணமி நாளான தைப்பூசத்தில் தோரணமலையை கிரிவலம் வந்து வழிபடுவது மிகவும் விசேஷம் என்கிறார்கள்.

தைப்பூசத் திருவிழா, முருகப்பெருமான் அருள்புரியும் திருத் தலங்களில் போற்றப்படுவதற்குக் காரணம், ஒரு தைப்பூச நட்சத்திரத்தன்றுதான் முருகப்பெருமான் வள்ளியை மணந்து கொண்டார் என்கின்றன ஞானநூல்கள். சூரனை அழிப்பதற்காக சக்தியானவள், தன் ஆற்றல் முழுவதை யும் கொண்டு சக்திவேலை உருவாக்கி முருகனிடம் கொடுத்த நாள் தைப்பூசம் என்பார்கள்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
தைப்பூசத்தில் முருகன் வழிபாடு சங்க காலம் தொட்டே நடை பெற்று வரும் வைபவம் என்கிறது தமிழர் வரலாறு. பூச நாளில் ‘வேலன் வெறியாட்டு’ என்ற முருக வழிபாடு, ஆண், பெண் என்ற இருபாலரும் வேல் பிடித்து ஆடிய செய்திகளை சங்கத் தமிழ் தகவல்கள் கூறுகின்றன. அற்புதமான இந்தத் தைப்பூச நன்னாளில் இந்த ஆண்டும் தைப்பூச நன்னாளான ஜனவரி-25 ம் தேதி (2024) இந்த ஆலயத்தில் தைப்பூச விழா நடைபெற உள்ளது. அதிகாலை 5.30 மணி முதல் மகாஸ்கந்த ஹோமம், மூலவர்–உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வீதி உலா, திருக்கல்யாணம் போன்ற வைபவங்கள் நடைபெற உள்ளன. விழாவின் விசேஷமாக இந்திய நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட தியாகிகள் குடும்பத்தினர், இந்தியப்போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், விவசாயப் பெருமக்கள், சாதனை புரிந்த அன்பர்கள் என விசேஷமானவர்களுக்கு பாராட்டும் மரியாதையும் செய்யப்பட உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் அன்னதானமும் நடைபெற உள்ளது.

பரிபூரண பக்தியோடு இந்த மகாஸ்கந்த ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பித்தால் சகல வரங்களும் கிடைக்கும். ஆரோக்கியம், ஆயுள், செல்வம், மணப்பேறு, பதவி உயர்வு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்தையும் வாரி வழங்குவான் தோரணமலையான். கடன், பதவி, வேலை, சொத்துப் பிரச்னைகளைத் தீர்க்கும் வல்லமை இந்த ஹோமத்துக்கு உண்டு.
இந்த ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் வேண்டிய அனைத்துப் பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குறிப்பாக குழந்தைகளின் எதிர்காலம் நன்கு அமையும் என்கிறார்கள். தோஷ நிவர்த்தி, குழந்தைப்பேறு, ஆரோக்கியம், ஆயுள், செல்வம், மணப்பேறு, கடன் நிவர்த்தி உள்ளிட்ட சகல நன்மைகளும் கிட்டும். நீண்ட ஆயுள், நிம்மதியான வாழ்வு, நீங்காத செல்வம், நிறைவான புகழ் யாவும் கிட்டும். எதிரிகள் தொல்லை, சொத்து தொடர்பான பிரச்னைகள் நீங்கும் என்கிறார்கள். சுருங்கச் சொல்லின் உங்களின் வேண்டுதல்கள் யாவும் தோரணமலையான் அருளால் நிச்சயம் நடக்கும். அதை இந்த சிறப்பு மிக்க ஹோமம் நிச்சயம் அருளும்.

வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம்+விபூதி+குங்குமம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07