ஹஸ்குவர்னா ஸ்வார்ட்பிளேன் 401 அறிமுகம் விபரம் வெளியானது

ஹஸ்குவர்னா நிறுவனத்தின் புதிய ஸ்வார்ட்பிளேன் 401 இந்திய சந்தையில் ஜனவரி 21-23 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய கேடிஎம் 390 டியூக் என்ஜின் உட்பட பல்வேறு முக்கிய பாகங்களை பகிர்ந்து கொள்ள உள்ளது.

பஜாஜ் ஆட்டோ கீழ் செயல்படுகின்ற ஹஸ்குவர்னா இந்திய சந்தையில் விட்பிளேன் 250 மற்றும் ஸ்வார்ட்பிளேன் 250 ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றது.

Husqvarna Svartpilen 401

சில மாதங்களுக்கு முன்பாக விற்பனைக்கு வந்த கேடிஎம் 390 டியூக் பைக்கில் உள்ள சேஸ் உட்பட 44.25 bhp பவர் மற்றும் 39Nm டார்க் வழங்குகின்ற நிலையில் 399cc சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் பெறுவதுடன் இதில் ஆறு வேக கியர்பாக்ஸ் பெறுகின்றது. கூடுதலாக, ஸ்லிப்ப்பர் உடன் அசிஸ்ட் கிளட்ச் உடன் க்விக் ஷிஃப்டர் பெறுகின்றது.

மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் ரைடிங் தன்மையை வழங்கும் வகையில் மேம்பட்டட யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் பெற்று இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டிருக்கும்.

வரும் ஜனவரி 21 ஆம் தேதி எதிர்பார்க்கப்படுகின்ற ஹஸ்குவர்னா ஸ்வார்ட்பிளேன் 401 தவிர விட்பிளேன் 401 மாடலும் அறிமுகம் செய்யப்படலாம்.

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.