மாஸ்கோ : நோட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா 2022 பிப்., 24ல் போர் தொடுத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நடந்து கொண்டுள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார உதவி, ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. இதனால் உக்ரைனும் ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளை போரில் பயன்படுத்தினால் அணு ஆயுதத்தை எடுப்போம் என ரஷ்யா பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது.
ரஷ்யா பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மெத்வதேவ் கூறியதாவது: அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை ரஷ்யாவுடனான போரில் பயன்படுத்த உக்ரைன் நினைக்கிறது. இதை தற்காப்பு நடவடிக்கையாக கருத முடியாது. ஆனால் போரில் அணு ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்துவதற்கான அடிப்படையான விஷயமாக இது அமையும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement