Verb from not knowing the language: The civilians who rounded up the Sadhus and attacked them | மொழி தெரியாததால் வந்த வினை: சாதுக்களை ரவுண்டு கட்டி தாக்கிய பொதுமக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் கங்காசாகர் மேளாவில் கலந்து கொள்ள வந்த சாதுக்களை கடத்தல்காரர்கள் என பொதுமக்கள் ரவுண்டி கட்டி தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் இன்று சாதுக்கள் சிலரிடம் அப்பகுதிவாசிகள் விசாரணை நடத்தினர். மொழி தெரியாமல் பேசியதால் கடத்தல்காரர்கள் என சந்தேகம் கொண்டு அவர்களை சரமாரியாக தாக்கினர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.தகவலறிந்து வந்த உள்ளூர் போலீசார் பொதுமக்களிடமிருந்து சாதுக்களை காப்பாற்றினர்.

.

போலீசார் சாதுக்களிடம் நடத்திய விசாரணையில் கங்காசாகர் மேளாவை (மகரசங்கராந்தி) காண உ.பி.மாநிலத்திலிருந்து
வந்த வந்தவர்கள் என தெரியவந்தது. இது தொடர்பாக 12 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.