மாலே: மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவம் மார்ச் 15ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது. மாலத்தீவு அதிபர் சீன பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் கேலி, விமர்சனம் செய்தனர். இதனால், அந்நாட்டிற்கு இந்தியாவில் இருந்து சுற்றுலா செல்வோர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இச்சூழ்நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, சீனாவிற்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பினார்.
இதற்கு பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ மாலத்தீவு சிறிய நாடாக இருந்தாலும், மற்ற நாடுகள் கொடுமைப்படுத்துவதற்கு எந்த நாட்டிற்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை’ எனக்கூறியிருந்தார்.
இச்சூழ்நிலையில், மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவம் மார்ச் 15ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு கெடு விதித்துள்ளது.
அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், ‘ இந்திய ராணுவத்தினர் மாலத்தீவில் இருக்க முடியாது. இது அதிபர் முகமது முய்சி மற்றும் நிர்வாகத்தின் கொள்கை முடிவு’ என்றார்.
மாலத்தீவில் தற்போது 88 இந்திய ராணுவ வீரர்கள் உள்ளனர். சீனாவின் ஆதரவாளராக முகமது முய்சு, ‘மாலத்தீவில் இருந்து இந்தியாவை வெளியேற்றுவோம்’ என தீவிர பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement