கபுர்தலா:பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி உயிரிழந்தார். மேலும், அவரது வளர்ப்பு நாயும் பலியானது.
கபுர்தலா நகரில் உள்ள ஒரு வீட்டில், நேற்று முன் தினம் இரவு தீப்பற்றியது. மளமளவென தீ பரவியதில் மொத்த வீடும் எரிய ஆரம்பித்தது. அந்த வீட்டில் வசித்த பீரா என்பவர், உடல் கருகி உயிரிழந்தார். அவரது வளர்ப்பு நாயும் தீயில் சிக்கி பலியாகியது.
பீராவின் மகள்கள் மற்றும் மருமகன் காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement