மாலே: ‛‛எங்களை கொடுமைப்படுத்த எந்த நாட்டிற்கும் உரிமை வழங்கவில்லை ” என அந்நாட்டு அதிபர் முகமது முய்சு கூறியுள்ளார்.
பிரதமர் மோடி குறித்தும், நம் நாட்டின் சுற்றுலா வசதிகள் குறித்தும் மாலத்தீவுகளின் சில அமைச்சர்கள் கேலி, கிண்டல் செய்தனர். இதற்கு நம் நாட்டு மக்கள் சமூக வலைதளத்தில் கொதித்தெழுந்தனர். இதனால், 3 அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இச்சூழ்நிலையில், சீன ஆதரவாளரான மாலத்தீவுகளின் புதிய அதிபர் முகமது முய்சு 5 நாள் பயணமாக சீனா சென்று திரும்பி உள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாலத்தீவு சிறிய நாடாக இருக்கலாம். ஆனால், எங்களை கொடுமைப்படுத்த எந்த நாட்டிற்கும் உரிமை வழங்க வில்லை. இந்திய பெருங்கடலில் சிறிய நாடாக இருந்தாலும் 9 லட்சம் சதுர அடியில் பொருளாதார மண்டலத்தை கொண்டுள்ளோம்.
இந்த கடலில் மிகப்பெரிய பங்கை கொண்ட நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. இந்த கடல் எந்த குறிப்பிட்ட நாட்டுக்கு மட்டும் சொந்தம் அல்ல. இந்த பகுதியில் அமைந்துள்ள அனைத்து நாட்டிற்குள் சொந்தம் ஆனது. எந்த நாட்டின் கொல்லைப்புறத்திலும் மாலத்தீவுகள் இல்லை. நாங்கள் இறையாண்மை மிக்க சுதந்திரமான நாடு. இவ்வாறு அந்த அறிக்கையில் முகமது முய்சு கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement