சபரிமலை : பக்திப் பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகர் வீரமணி தாசனுக்கு கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஹரிவராசனம் விருது நேற்று வழங்கப்பட்டது.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள அரசு சார்பில் ஆண்டுதோறும் இசைத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஹரிவராசனம் விருது பிரபல பின்னணி பாடகர் வீரமணி தாசனுக்கு நேற்று வழங்கப்பட்டது.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் சபரிமலை சன்னிதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழுடன் கூடிய இந்த விருதை வீரமணி தாசனுக்கு வழங்கினார்.
இது குறித்து வீரமணி தாசன் கூறுகையில் ”பல ஆண்டுகளாக பக்திப் பாடல்களை பாடி இறைபணியில் ஈடுபட்டு வரும் எனக்கு இது முதல் பாராட்டு.
இது மகிழ்ச்சியுடன் கூடிய பெருமையான தருணம். பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடகர்கள் சேரும் போது சிறந்த இசை படைப்புகள் உருவாகின்றன” என்றார்.
வீரமணி தாசன் தமிழ் தெலுங்கு கன்னடம் சமஸ்கிருதம் மொழிகளில் 6000க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை பாடியுள்ளார். இதில் பெரும்பாலானவை அய்யப்பன் பாடல்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement