இலவச சேவைக்கு முற்றுப்புள்ளி! ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

5G Data Price Hike: டெலிகாம் ஆபரேட்டர்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளன. 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், ஜியோ மற்றும் ஏர்டெல்  நிறுவனங்கள் தங்கள் 5ஜி சேவைக்காக விலையை உயர்த்தவில்லை. ஆனால் இரு நிறுவனங்களும் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது விலையை உயர்த்துவது குறித்து இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5 முதல் 10 சதவீதம் வரை விலை உயர்த்தலாம் என்று தகவல்கள் அறிக்கைகள் கூறுகின்றன. இதற்கு முக்கியக் காரணம் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது தான்.

5ஜி ரீசார்ஜ் திட்டங்களின் விலை எவ்வளவு அதிகமாக இருக்கும்? 

எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் 5ஜி நெட்வொர்க்கான தனி ரீசார்ஜ் திட்டங்களை பரிசீலித்து வருகின்றன. இந்த 5ஜி ரீசார்ஜ் திட்டங்களின் விலை வழக்கமான 4ஜி ரீசார்ஜ் திட்டத்தை விட 5 முதல் 10 சதவீதம் கட்டணம் அதிகமாக இருக்கும். 

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தங்கள் 5G திட்டங்களை அறிமுகப்படுத்தலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. 

வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா சலுகை

மறுபுறம் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரிப்பதன் மூலம் தங்கள் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படலாம் என ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் கருதுகிறது. அதன் அடிப்படையில் ARPU (பயனருக்கான சராசரி வருவாய்) அதிகரிக்க சில கூடுதல் சலுகைகளை வழங்கவும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் செலுத்தும் விலைக்கு ஏற்ப சலுகை வழங்கி வாடிக்கையாளர்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும். இது தவிர, நிறுவனங்கள் தங்கள் 4ஜி திட்டங்களை விட 30 சதவீதம் கூடுதல் டேட்டாவை வழங்கலாம். 

4ஜி திட்டங்களும் விலை அதிகமாகலாம்?

5ஜி சேவையில் பயனர்கள் அதிக டேட்டாவைப் பெறுவார்கள் என்பதால், அவர்களின் டேட்டா நுகர்வு நிச்சயம் அதிகரிக்கும். இதன் காரணமாக தற்போதுள்ள 4ஜி ரீசார்ஜ் திட்டங்களின் விலையையும் நிறுவனம் அதிகரிக்கலாம்.

தற்போது 5ஜி சேவைக்கு என தனியாக கட்டணம் இல்லை

உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் சேவை விரிவாக்கம் பணி வேகமாக நடந்து வருகிறது. அதாவது இரண்டு நிறுவனங்கள் ஒரு வருடத்திற்குள் 10 கோடி பயனர்களை 5ஜி நெட்வொர்க் சேவையின் கீழ் கொண்டு வந்துள்ளன. இருப்பினும், இரண்டு டெலிகாம் ஆபரேட்டர்களும் இந்த 5ஜி சேவைக்கு என தனியாக இன்னும் கட்டணம் நிர்ணயிக்கவில்லை. ஒருவகையில் பார்த்தால் இரு நிறுவனமும் இலவச சேவையாக வழங்கி வருகிறார்கள். வரும் காலங்களில் புதிய திட்டங்களுக்கு நீங்கள் 5ஜி டேட்டாவிற்கு பணம் செலவழிக்க வேண்டும். தற்போது, ​​பயனர்கள் வரம்பற்ற 5ஜி டேட்டாவை இலவசமாகப் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.