விமான நிலைய மேம்பாலத்தில் இரண்டு மணி நேரம் சிறைப்பட்ட ராதிகா ஆப்தே

சமீப நாட்களாக விமான பயணங்களில் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து திரையரங்க பிரபலங்கள் பலரும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு விமான பயணம் அல்ல, அதற்கு முன்னதாக விமான நிலையத்தில் ஏற்பட்ட அனுபவமே மிகப்பெரிய கசப்பணர்வை கொடுத்துள்ளது. தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராதிகா ஆப்தே, சமீபத்தில் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் விமான பயணம் மேற்கொள்வதற்காக வந்தார் ராதிகா ஆப்தே,

அதே சமயம் விமான நிலைய ஊழியர்கள் சிலர் விமான நடை மேம்பாலத்தில் ராதிகா ஆப்தே உள்ளிட்ட இன்னும் பல பயணிகளை அமரும்படி வற்புறுத்தி இரண்டு பக்க கதவுகளையும் அடைத்து விட்டனர். 8:30 மணிக்கு கிளம்ப வேண்டிய அவரது விமானம் 10:30 மணியாகியும் கிளம்புகின்ற அறிகுறியும் தெரியவில்லை. அதற்கு காரணங்களும் சொல்லப்படாமல் நடை மேம்பாலத்திலேயே கிட்டத்தட்ட சிறைபிடிக்க பட்டது போன்று ராதிகா ஆப்தேவும் இன்னும் சில பயணிகளும் அடைத்து வைக்கப்பட்டனர்.

விமான நிலைய ஊழியர்களும் அது குறித்த தெளிவான தகவலை தெரிவிக்கவில்லை. இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ராதிகா ஆப்தே நிச்சயம் இது வேடிக்கையான அனுபவம் தான் என்று விரக்தியுடன் கூறியுள்ளார். அதன் பிறகு நிலைமை சீராகி விமான பயணத்தை மேற்கொண்டுள்ளார் ராதிகா ஆப்தே.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.