புளோரஸ் திமூர், :இந்தோனேஷியாவின் புளோரஸ் தீவில் புளோரஸ் திமூர் மாவட்டத்தில் லெவோடோபி லக்கி- லாகி எரிமலை உள்ளது. 5197 அடி உயர எரிமலையான இது இரட்டை எரிமலைகளில் ஒன்றாகும்.
நேற்று முன்தினத்தில் இருந்து லெவோடோபி லக்கி- லாகி எரிமலை 40க்கும் மேற்பட்ட முறை வெடித்துள்ளது. 1600- – 4900 அடி உயரம் வரை தீப்பிழம்புகள் பறக்கின்றன.
அருகே வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எரிமலையை சுற்றி 2.5 கி.மீ. துாரத்துக்கு உள்ளூர் மக்கள், பயணியர் வர வேண்டாம் என அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
சுமத்ரா தீவில் மராபி எரிமலை டிசம்பருக்கு பின் 2வது முறையாக நேற்று முன்தினம் வெடித்தது. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement