Delhi dense fog: IMD says no relief for next 4-5 days; 17 flights cancelled, 30 delayed | டில்லியில் கடும் பனி : விமான, ரயில் சேவைகள் பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: டில்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 30 ரயில்கள், 30 விமானங்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டில்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் மக்கள் பகல் நேரங்களிலும் விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றனர். காலை வேளையில் வெப்பநிலை 4.8 டிகிரி செல்சியசுக்கும் கீழ் செல்வதால் கடுமையான குளிர் காணப்படுகிறது.

latest tamil news

ரயில், விமான போக்குவரத்து

டில்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவால், 30 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன என ரயில்வே தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 17 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 30 விமானங்கள் தாமதமாக கிளம்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.