உன்னாவ்: தமிழ்நாட்டில் இருந்து அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக பட்டாசுகளை ஏற்றி சென்ற லாரி நடுவழியில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால் லாரியில் இருந்த பட்டாசுகள் 3 மணிநேரம் வெடித்து சிதறின. பின்னர் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22-ந் தேதி நடைபெற உள்ளது.
Source Link
