பெங்களூரு:
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி-20 கிரிக்கெட் தொடரில்
ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா.
அதிரடியாக ஆடிசதமடித்தார் ரோஹித் சர்மா
இந்தியா வந்துள்ள
ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது.
முதல் இரு போட்டியில் வென்ற இந்தியா, 2-0 என தொடரை கைப்பற்றியது. இன்று
மூன்றாவது, கடைசி போட்டி பெங்களூரு, சின்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பேட்டிங்கில்
களம் இறங்கிய இந்திய அண 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள்
எடுத்துள்ளது. அதிரடியாக ஆடிய கேப்டன் ரோஹித் சர்மா சதமடித்தார். இவர்
69 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரிங்கு சிங்
69. ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து
ஆப்கானிஸ்தானுக்கு 213 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement