புதுடில்லி : தாமதமாக விமானம் புறப்பட்டது, ஓடுதளத்தில் அமர்ந்து உணவு அருந்திய விவகாரத்தில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ரூ. 1.2 கோடி அபராதம் விதித்தது, மற்றும் பல்வேறு புகார்களில் சிக்கிய மேலும் இரு விமான நிறுவனங்களுக்கு தலா ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடில்லி விமான நிலையத்தில் இருந்து, கோவாவுக்கு, இண்டிகோ விமான கடந்த சிலநாட்களுக்கு முன் விமானம் தாமதமாக புறப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் துணை விமானி அனுப் குமார். இதனால் ஆத்திரமடைந்த விமான பயணி சாஹில் கட்டாரியா அனுப் குமாரை தாக்கினார். சக பயணியர் மற்றும் விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து, போலீசில் விமான ஊழியர்கள் புகார் அளித்தனர்.
இறுதியில் விமானம், 10 மணி நேர தாமதத்துக்கு பின், கோவாவுக்கு புறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக டி.ஜி.சி.ஏ. எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தி, இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ. 1.2 கோடி அபராதம் விதித்தது.
இதே போன்று ‛‛ஸ்பைஸ் ஜெட்” விமானத்தில் கழிவறை பழுதடைந்ததால் மும்பையிலிருந்து டில்லி வரை கழிவறையில் சிக்கிய பயணியிடமும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தி ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதித்தது.
மேலும் பனி மூட்டம் காரணமாக விமானத்தை இயக்குவதில் போதிய முன்னேற்பாடுகள் செய்யாமல் இருந்ததாக எழுந்த புகாரில் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதமும் டி.ஜி.சி.ஏ., விதித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement