கோலார் : “கோலார் மாவட்ட பா.ஜ., தலைவராக டாக்டர் வேணுகோபால் தொடர்வார்,” என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பா.ஜ.,வின் கோலார் மாவட்ட தலைவராக டாக்டர் வேணுகோபால் பதவி வகித்து வந்தார். இவரது பதவிக் காலம் முடிந்த நிலையில் மாவட்ட தலைவர் பதவிக்கு பலர் பெரிதும் முயற்சித்து வந்தனர்.
இதில், தங்கவயல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., சம்பங்கி, முன்னாள் அமைச்சர் வர்த்தூர் பிரகாஷ், பங்கார்பேட்டையின் சந்திரா ரெட்டி உட்பட ஒரு டஜன் பிரமுகர்கள், தலைவர் பதவிக்காக விருப்பம் தெரிவித்து, முயற்சித்து வந்தனர்.
இந்நிலையில், “கட்சி வளர்ச்சிக்கு டாக்டர் வேணுகோபால் பொருத்தமானவர். அவரே மாவட்ட தலைவராக நீடிக்கலாம்,” என, மாநில தலைவர் விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.
அதேபோல் கோலார் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபைத் தொகுதி களிலும் தலைவர்களின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. அடுத்த தலைவரை நியமனம் செய்யும் வரை, பதவியில் இருப்பவர்களே தொடருவார்கள்.
லோக்சபா தேர்தல் நடக்க இருப்பதால், நகர, கிராம பகுதிகளின் தலைவர்களே பதவியில் நீடிக்கவும் மாநில தலைமை ஆலோசித்து வருகிறது. இன்னும் இறுதி முடிவு மேற்கொள்ளவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement